பாம்புகளில் அதிக விஷத்தன்மை கொண்டது கோப்ரா வகை நாகங்கள், ஆப்ரிக்காவில் அதிகம் வாழ்கிறதாக கூறப்படுகிறது.
ஆனால், ஆசியாவில் அதிக விஷம் கொண்ட பாம்பாக காணப்படுவது ராஜநாகம் தான். இவை தமிழகத்தின் ஒருசில பகுதியில் வாழ்ந்து வருகின்றது.
விஷத்தன்மை மிகுந்த இந்த ராஜ நாகம் தமிழகத்தில் ராஜ பாளையம், சதுரகிரி மலை, நாகர்கோயில், மற்றும் மாஞ்சோலை காட்டு பகுதி ஆகிய இடங்களில் அதிகம் காணப்படுகிறது.
ராஜ நாகம் பற்றிய உண்மைகள்.
ராஜ நாகம் தெற்காசிய பாம்பு வகையாகும். தென்னிந்தியாவில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் அதிகமாக காணப்படும் இந்த ராஜ நாகம் 18 அடி நீளம் வரை இருக்கும்.
கூடு கட்டி முட்டை இடும் வழக்கம் கொண்ட ஒரே பாம்பு வகை ராஜ நாகம் தான். ராஜனாகத்தின் ஆயுட்காலம் 20 ஆண்டுகள். இந்த நாகம் மூங்கில் காட்டு பகுதியில் அதிகமாக வாழ்கின்றது.
ராஜ நாகத்தை மற்ற பாம்புகளுடன் ஒப்பிடும் போது, இதன் விஷத்தன்மை மிகவும் வீரியமானது. ஒரு மனிதரை கடித்த 60 நொடியில் கொன்று விடும்.
இந்த ராஜ நாகம் தனது நீளத்தில் பாதிக்கும் மேல் உயர்த்தி படம் எடுத்து காட்டும் திறன் கொண்டது. பாம்புகளில் இவை மட்டும் தனது இனத்தை சேர்ந்த பிற பாம்புகளை கொன்று தின்னும் பழக்கம் கொண்டுள்ளது.
தமிழ்நாட்டில் ராஜபாளையம் வன பகுதியில் உள்ள ராஜநாகம் பற்றிய ஆய்வில், 20- 25 அடி நீளமும், 5-7 அடி உயரம் படம் எடுக்கும் தன்மையும் ராஜநாகம் கொண்டுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.