நடிகர் சங்கத்தில் ஒரு பிரபலம் இருப்பதாகவும் அவரால் பல பெண்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக நடிகை ஸ்ரீரெட்டி பாலியல் புகார் கூறியுள்ளார்.
நாடெங்கும் மீ டூ பாலியல் புகார்கள் பற்றி எரிகிறது. மீ டூ – விற்கு முன்பே திரைப் பிரபலங்களைப் பற்றி பல புகார்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் ஸ்ரீரெட்டி.
இந்நிலையில், தற்போது அவரது முகநூலில் ஒரு பதிவை இட்டுள்ளார். அதில், அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
நடிகர் சங்கத்தில் ஒரு பிரலம் இருக்கிறார். அவரால் பல நடிகைகள் மற்றும் துணை நடிகைகள் பாலியல் தொல்லைகளை சந்தித்துள்ளனர். ஆனால், செய்தியாளர்கள் முன்பு ரொம்ப பவ்யமாக அவர் பேசுகிறார். உன்னை நான் விட மாட்டேன். உன்னை பற்றி ரகசியங்களை வெளியிடுவேன். அதற்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது. பல பெண்களிடம் வலுக்கட்டாயமாக படுக்கையை பகிர்ந்து விட்டு நீ பணம் கொடுத்துள்ளாய். தமிழ் திரையுலகை இயக்குவது நீதான் என நினைக்கிறாயா?
சீக்கிரம் திருமணம் செய்து கொள்.. உனக்கான நேரம் தொடங்கி விட்டது. ஜெய் ஜெயலலித்தாம்மா” என பதிவிட்டுள்ளார்.
அதேபோல் மற்றொரு பதிவில் “அனைத்து தமிழ் தயாரிப்பாளர்களும் உன்னை நம்பி வாக்களித்தனர். ஆனால், நீ அதை தவறாக பயன்படுத்தி வருகிறார். உன்னால் பல தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கோபம் வரும் போது நீ அவ்வளவுதான். உனக்கான அனைத்தையும் நீ இழப்பாய். எவ்வளவு பணம் இருந்தால் நீ திருப்தி அடைவாய்? உன்னால் எத்தனை தயாரிப்பாளர்கள் கஷ்டப்படுகிறார்கள். உனக்கு வெட்கமாக இல்லையா? இந்த பாவம் உன்னை சும்மா விடாது” என கோபமாக குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், அவர் குறிப்பிட்ட நபரின் பெயரை அவர் குறிப்பிடவில்லை.