நேற்று பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க கைது செய்யப்பட வேண்டும் என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நேற்று பிற்பகல் முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தில் நுழைந்து சில ஆவணங்களை எடுத்து செல்ல முயன்ற வேளை அங்கு வந்த ஒரு குழுவுடன் முறுகல் உண்டாக்கியது.
இதனையடுத்து முன்னாள் அமைச்சரின் பாதுகாவலர் ஒருவர் துப்பாக்கி பிரயோகம் செய்ததில் ஒருவர் உயிரழந்தார்.
இதனையடுத்து முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க கைது செய்யப்பட வேண்டும் என பெட்ரோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெட்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக வந்த தகவலை அடுத்து எரிபொருள் நிலையங்களில் நீண்ட வாகன வரிசை காணப்பட்டது.