டெல்லியில் நங்லாய் புகையிரத நிலையம் அருகே இன்று காலை தண்டவாளத்தில் அமர்ந்து மதுவருந்திய 3 பேர் புகையிரதம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
டெல்லியின் நங்லாய் புகையிரத நிலையம் அருகே இன்று காலை சுமார் 7.30 மணியளவில் சிலர் தண்டவாளத்தில் அமர்ந்து மதுவருந்திக் கொண்டிருந்தனர்.
இதன்போது, குறித்த அந்த வழியாக புகையிரதம் வந்துகொண்டிருந்த போதிலும் மது போதையில் இருந்த குறித்த மூவரும் புகையிரதம் வருவதைக் கவனத்திற்கொள்ளவில்லை.
எனவே, அவர்கள் மீது புகையிரதம் மோதியதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், உயிரிழந்தவர்கள் யார்? எந்த பகுதியைச் சேர்ந்தவர்கள்? என்பது இதுவரை கண்டறியப்படவில்லை.
குறித்த மூவரும் யார் என்பது தொடர்பில் கண்டறியும் நடவடிக்கையில் பொலிஸாhர் ஈடுபட்டு வருவதுடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.