புதிய தலைமை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள மகிந்த ராஜபக்சவுக்கு வரவேற்புத் தெரிவித்து, கிளிநொச்சி நகரில் நேற்றுப் பொங்கல் பொங்கி, பட்டாசுவெடித்து மகிந்தவின் ஆதரவாளர்கள் கொண்டாடினர்.
சிறிலங்கா பொதுமக்கள் முன்னணி கட்சியைச் சேர்ந்தவர்களே இந்த ஏற்பாடுகளை மேற்கொண்டு அவர்களே அதில் பங்கெடுத்தும் இருந்தனர்.கிளிநொச்சிப் பொது மருத்துவமனைக்கு முன்பாக உள்ள கட்சி அலுவலகத்தில் பொங்கல் இடம்பெற்றது.
இது தொடர்பான ஒளிப்படங்கள் சமூகவலைத் தளங்களில் வெளியாகியிருந்தது. அது தொடர்பில் பலரும் தமது கண்டனத்தைப் பதிவு செய்தனர். தமிழ் மக்களை இனஅழிப்புச் செய்த ஒருவருக்காக, போரின் பாதிப்புக்கு உள்ளான மக்களே இவ்வாறு செய்வது சரியா என்றும் கருத்துப் பதிவிடப்பட்டது.