விஜய் நடித்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள படம் சர்கார். ஆனால் இந்த படத்தின் கதை என்னுடையது என்று துணை இயக்குனரான வருண் ராஜேந்திரன் கூறி வருகிறார்.
இந்நிலையில் நமது சினி உலகம் தளத்தின் மூலம் வருணுடன் தொடர்பு கொண்ட போது பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
அதில், ஏ.ஆர்.முருகதாஸ் தமிழ் சினிமாவின் திருடன். இப்படி திருடி படம் எடுத்து எதை அவர் சாதிக்க போகிறார் என்று தெரியவில்லை. ஒரு சட்ட கல்லூரி மாணவரது ஓட்டை கள்ள ஒட்டாக போடுகிறார்கள், இதுதான் என்னுடைய செங்கோல் படத்தின் கதை.
நான் அடுத்த மூவ்மெண்ட்க்கு போய் கொண்டு இருக்கேன். அடுத்து கோர்டில் கேஸ் போடுவது சம்பந்தமாக எனது முயற்சிகளை எடுத்து வருகிறேன். இதனால் தான் இந்த விவகாரத்தில் எனது நேரடி தலையீடு இல்லாமல் உள்ளது என்றார்.
மேலும் அவர் கூறிய பல தகவல்களை நீங்களே இந்த வீடியோவில் பாருங்கள்….