அரச நிறுவனங்களினுள் மோதல் நிலைமைகளை தவிர்த்து சமாதானத்தை நிலைநாட்ட அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஶ்ரீலங்கா சுதந்தர கட்சியின் மற்றும் பொதுஜன முன்னணியின் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் இன்று முற்பகல் இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.
கடந்த தினங்களில் அரச நிறுவனங்கள் சிலவற்றினுள் இடம்பெற்ற சம்பவங்களை சுட்டிக்காட்டியே ஜனாதிபதி மைத்திரி இதனை தெரிவித்துள்ளார்.
சர்வதேச அளவில் நாட்டிற்கு அவதூறு ஏற்படும் வகையில் சில அரசியல் கட்சிகள் செயற்படுகின்றன, எனவும் இவ்வாறான நிலைமையில் அனைத்து அரச நிறுவனங்களிலும் சமாதானத்தை நிலைநாட்டி அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குமாறு ஜனாதிபதி கோரிக்கை விடுத்தார்.