விடுதலை புலிகளுக்கு எதிரான இறுதிப்போரின் போது கூட, ஐ.நா அமைதிகாக்கும் படையினரின் உதவியை கோரியிருக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து புதிய பிரதமர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் இதுகுறித்து கூறுகையில், “பிரதமர் பதவிக்கான மாற்றத்தை பற்றி விமர்சனம் செய்யும் வெளிநாடுகளும், சர்வதேச அமைப்புக்களும் தேர்தல்களை நடத்துவதில் தாமதம் ஏற்பட்டது பற்றி அமைதியாக இருக்கின்றது.
இந்நிலையில், அமெரிக்க இராஜாங்க திணைக்களம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதில் தாமதம் பற்றிய ஒற்றை அறிக்கையை வெளியிட தவறியுள்ளது.
மேலும், புதிய அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு ஐ.நாவின் அமைதிகாக்கும் படையினரை இலங்கைக்கு அனுப்ப ரணில் விக்ரமசிங்க முயற்சி செய்து வருகின்றார்.
தமிழீழ விடுதலை புலிகளுக்கு எதிரான இறுதி யுத்ததின்போது ஏற்பட்டிருந்த அசாதாரண நிலைமைகளிலும் கூட நாம் ஒருபோதும், ஐ.நா அமைதிகாக்கும் படையினரின் உதவியை கோரியிருக்கவில்லை.” என கூறினார்.