நடிகை ராக்கி சாவந்த் தமிழில் கம்பீரம் படத்தில் நடித்தார். தற்போது இந்தி படங்களில் நடித்து வருகிறார். சில தினங்களுக்கு முன் அவர் அளித்தபேட்டி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நடிகர் நானா படேகர் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தியவர் நடிகை தனுஸ்ரீ தத்தா. இவர் தன்னை பலமுறை கெடுத்ததாக கூறியதுடன் தனுஸ்ரீ ஒரு லெஸ்பியன் என்று பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.
தனது புகழை கெடுக்கும் வகையில் பொய்யான தகவலை வெளியிட்டிருப்பதாக கூறிய ராக்கி சாவந்த் மீது ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்திருக்கிறார் தனுஸ்ரீ.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மற்றொரு சர்ச்சை வீடியோ வெளியிட்டிருக்கிறார் ராக்கி. சிங்கிள் பீஸ் நீச்சல் உடை அணிந்து இடுப்பை சுற்றி இரும்பு சங்கிலி கட்டி அதில் ஒரு பூட்டை பூட்டி தொங்கவிட்டுக்கொண்டு ராக்கி சாவந்த் நடனம் ஆடுவதுபோல் அந்த வீடியோ படமாக்கப்பட்டிருக்கிறது.
இதுபற்றி அவர் கூறும்போது, ‘திரைப்பட துறையில் பெண்கள் பாதுகாப்பாக இருக்க என்ன வழி என்றதற்கு இடுப்பை சுற்றி சங்கிலி கட்டி பூட்டுபோட்டுக்கொள்வது சிறந்த வழி என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக் கிறார்கள்’ என அவர் நக்கலாக கூறியிருக்கிறார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. பாலிவுட்டிலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.