சுவிட்சர்லாந்தில் சுற்றுலா வந்த பெண்மணி ஒருவரின் மருத்துவ செலவை ஏற்பதில் சர்ச்சை எழுந்துள்ளது.
சுவிட்சர்லாந்தின் St. Gallen மாகாணத்திற்கு கடந்த 2015 ஆம் ஆண்டு ஹங்கேரி நாட்டு கர்ப்பிணி பெண் ஒருவர் சுற்றுலா வந்துள்ளார்.
இவர் St. Margrethen பகுதியில் உள்ள ஹொட்டலில் பதிவு செய்யப்பட்ட அறையில் தங்கியுள்ளார்.
இதனிடையே பேறு காலம் நெருங்கியதை அடுத்து, வாடகை டாக்ஸி ஒன்றை வரவழைத்து அருகாமையில் உள்ள Rorschach மருத்துவமனைக்கு விரைந்துள்ளார்.
ஆனால் அங்கிருந்து மருத்துவர்களின் அறிவுரையால் St. Gallen மாகாண மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
அதே நாள் அங்கு பெண் குழந்தை ஒன்றையும் அந்த ஹங்கேரி நாட்டவர் பிரசவித்துள்ளார்.
இந்த நிலையில், ஹங்கேரிய சுகாதார காப்பீடு நிறுவனமானது குறித்த பெண்மணியின் பிரசவத்திற்கான செலவை ஏற்க மறுத்துள்ளது.
மட்டுமின்றி அப்போதைய சூழலில் அவராலும் மருத்துவ செலவு தொகையை செலுத்த முடியாமல் போனது.
இதனால் மாகாண மருத்துவமனையானது St. Margrethen நகராட்சியிடம் குறித்த தொகையை செலுத்த கோரிக்கை வைத்தது.
5 நாட்களுக்கான மருத்துவ செலவு மற்றும் தாய், சேய்க்கான பிரத்யேக செலவு என ஒரு தொகையை குறிப்பிட்டுள்ளது.
ஆனால் St. Margrethen நகராட்சி நிர்வாகம் Rorschach மருத்துவமனைக்கும் அவர்கள் St. Gallen மாகாண நிர்வாகத்திற்கும் அந்த கோரிக்கையை திருப்பி அனுப்பியுள்ளனர்.
ஆனால் இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டும், இதில் யார் மருத்துவ செலவை ஏற்பது என்ற முடிவு மட்டும் எட்டவில்லை என கூறப்படுகிறது.
சட்டப்படி குறித்த சுற்றுலா பயணியின் இயலாமையை கருத்தில் கொண்டு பிரசவம் நடந்த மருத்துவமனையே செலவை ஏற்க வெண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் சட்ட ரீதியான விளக்கத்தை பின்னர் நீதிமன்றம் அளிக்கும் என தெரியவந்துள்ளது.