புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவை நியமித்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்த நடவடிக்கையால் ஜனநாயகம் வீழ்த்தப்பட்டுள்ளது என ஐ.நா.வுக்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து தெர்விக்கையில், இலங்கையில் அரசியல் குழப்பங்கள் தொடர்பாக தமது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள சமந்தா பவர், அதில், “மைத்திரிபால சிறிசேனவின் நடவடிக்கைகளால், ஜனநாயகம் வீழ்த்தப்பட்டுள்ளது. அவர், பொறுப்புக்கூறலுக்கு உறுதியளித்தார்.
ஆனால் இப்போது, போர்க்குற்றங்கள், காணாமல் ஆக்கப்படுதலுக்கு பொறுப்பான மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டு வந்துள்ளார்.
இந்நிலையில், அவசர இராஜதந்திரம் தேவை, இலங்கையர்கள் இதனை கையாள வேண்டும். பெருமளவு இரத்தம் சிந்தப்பட்டுள்ளதால் பின்நோக்கித் திரும்ப முடியாது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.