பொலிஸ் அதிகாரி ஒருவரின் தலையை வெட்டிய பின் உடலை சமைத்து சாப்பிட்டதாக கூறி இருவரை கைது செய்யப்பட்ட சம்பவம் உக்ரைன் நாட்டில் அரம்க்கேறியுள்ளது.
உக்ரைன் நாட்டில் விசாரணை அதிகாரிகள் மற்றும் தடயவியல் நிபுணர்கள் குழு குப்பைகளுக்கு இடையே இருந்து தலையற்ற உடலை மீட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
உக்ரைன் நாட்டின் Saltivka பகுதில் அரங்கேறிய இச்சம்பவத்தில், மீட்கப்பட்ட உடலில் கத்தியால் தாக்கப்பட்ட காயங்கள் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் குறித்த பகுதியில் குப்பைகளை வீசியது தந்தை மற்றும் மகன் என தெரியவந்தது.
மேலும் அவர்களது குடியிருப்பின் மொட்டைமாடியில் கூண்டில் அடைக்கப்பட்ட நிலையில் தலை ஒன்றையும் அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
கழுத்தில் கூரான ஆயுதத்தால் தாக்கப்பட்டே அந்த பொலிஸ் அதிகாரி கொல்லப்பட்டுள்ளார்.
பொலிஸ் அதிகாரியை கொன்று அவரது சதை பகுதியை சமைத்து சாப்பிட்டதையும் இருவரும் ஒப்புக்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.