Loading...
எல்லோருடைய வீட்டிலும் சீரகம் இருக்கும். சீரகத்தில் கணக்கிலடங்காத அளவிற்கு மருத்துவ குணங்கள் உள்ளன. முக்கியமாக இதில் நோயெதிர்ப்பு தன்மை, பூஞ்சை எதிர்ப்பு பொருள்கள் அடங்கியுள்ளன.
சீரகத்தை நீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி தொடர்ச்சியாக அந்த நீரை ஒரு மாதம் குடிப்பதால் கிடைக்கும் பயன்களை இப்போது பார்க்கலாம்.
Loading...
சீரக நீரை குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்:-
- செரிமான பிரச்சனைகள் இருந்தால் சீரகத் தண்ணீரை குடிப்பதால் உடனடியான நிவாரணம் கிடைக்கும்.
- சீரகத்தில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து விடுபட உதவுகிறது.
- உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் சீரக நீரை குடித்தால் அதில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது.
- சீரகத்தில் உள்ள இரும்பு சத்து ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து உடலில் இரத்தசோகையை குணப்படுத்தும்.
- சளி பிரச்சனை இருந்தால் சீரக நீரைக் குடித்தால் சுவாசக் குழாயில் உள்ள நோய்க் கிருமிகள் அழிந்து சளி மற்றும் இருமலில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.
- தொடர்ந்து இந்த நீரைக் குடித்து வருவதால் ஞாபக சக்தி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யலாம்
Loading...