மட்டக்களப்பில் வீடுவாடகைக்கு கொடுக்கும் உரிமையாளர்கள் தனிமையில் தங்கியிருக்க வருவோருக்கு வீடு வழங்குவதில் முன்னிற்பதை தவிர்க்க வேண்டும் இதற்கு கிராமமட்டங்களில் சமூகத்தின் மீது அக்கறை கொண்டு செயற்படும் அமைப்புக்கள் கவனம்செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பில் அண்மைக்காலமாக இளம் சமூகத்தினர் உயிரைமாய்த்துக் கொள்ளும் சம்பவங்கள் அதிகமாக இடம்பெற்றுவருகின்றது என்ன காரணத்தினால் நடைபெறுகின்றது. என்பதனை சற்று ஆழமாக நாம் ஆராயமல் விட்டால் எதிர்கால சமூகத்தின் இருப்பு கேள்விக்குறிதான்.
குறிப்பாக சில இடங்களில் இருந்து கல்விச்செயற்பாடு மற்றும் தொழில் நிமிர்த்தம் வருவோர் வாடகை குடியிருப்புகளில் தனிமையில் இருந்து இத்தகைய சம்பவங்களில் அதிகம் பங்கெடுக்கின்றனர்.
அண்மையில் இசை நடனக்கல்லூரி பின் வீதியில் மட்டக்களப்பு நகரை அண்டிய கிராமப்புறத்தைச் சேர்ந்த இளைஞன் கொல்லப்பட்ட சம்பவம் பின்னர் இசைநடனக்கல்லூரியில் படிக்கும் மட்டக்களப்பு நகரை அண்டிய மாணவி தற்கொலை.
அடுத்து கல்லடிப்பாலத்தருகில் சடலமாக மீட்கப்பட்ட மாணவி இப்படியாக இளையவர்களின் மரணச்சம்பவங்கள் அரங்கேறியிருக்கின்றன.
இதற்கு என்ன காரணம் என்று இறந்தவரின் பெற்றோர்களிடம் கேட்டாலும் தங்கியிருந்த வீட்டு உரிமையாளரிடமும் கேட்டால் தங்களுக்கு தெரியாது என்று தான் பதில் தெரிவிப்பார்கள்.
ஆனால் தான் இறக்கவேண்டும் என்ற முடிவை எடுக்கும் ஒருவருக்கு அழுத்தம் பலவழிகளிலும் பிரயோகிக்கப் பட்டிருக்கலாம். அது எங்கிருந்து ஆரம்பிக்கப்படுகின்றது என்பது கண்டறியப்படவேண்டும்.
இந்நிலையில், இறப்புக்கு பின்னர் பலவகையான கதைகள் சந்தேகங்கள் என்பன உருவாகி மறக்கப்படுவதும் இயல்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
தனிமையில் வாடகைக்குடியிருப்பில் தங்கியிருப்பவர்கள் தங்களது வீட்டில் தாய், தந்தை, சகோதரங்களின், கட்டுப்பாட்டிற்குள் இல்லாது தனித்த வாழ்க்கையிற்குள் செல்லும் போது ஏதாவது பிழைகள் செய்யும் போது யார் நம்மளைப்பார்க்கப் போகிறார்கள் என்ற தைரியம் மட்டும் வருகின்றபோது சில காரியங்கள் சாதிக்கப்படுகின்றது.
மேலும், சிலநேரங்களில் சாதிப்புகள் வேதனையடையும் போது விரக்தி ஏற்பட்டு தனிமையில் இருந்து யோசித்து ஆறுதல் சொல்ல சிந்தனையை வேறுகோணத்திற்கு மறக்கச்செய்ய மனம்விட்டு பேசமுடியாத மனநிலையில் தாங்களே தங்களை மாய்த்துக்கொள்ள முடிவெடுக்கின்றனர்.
வாடகை வீட்டின் உரிமையாளர் இவர்களுடைய எந்த விடயங்களிலும் தலையிடமாட்டார் காரணம் அவர்கள் வாடகைப்பணம் பெற்றுக்கொண்டு வருமானத்தை தேடுபவர்கள். தலையிட்டால் தங்களது வருமானம் தடைப்படும்…மற்றையது.
இந்நிலையில், வாடகைக்கு இருப்பவர் எனது விடயத்தில் தலையிடமுடியாது என்றால் அது அவர்களுக்கு அவமானம்…ஆகவே கேட்க வேண்டி அவசியம் வீட்டு உரிமையாளருக்கு இல்லை கேட்கமாட்டார்கள் என்ற தைரியம் குடியிருப்பவர்களுக்கு ஆனால் குடியிருப்பவர்கள் சில பிரச்சினைக்கு முகங்கொடுத்து பாரியதாக்கம் செலுத்தும்போது பிரச்சினைகள் என்னவாக இருக்கும் என்று தீர்மானித்துக் கொள்ளுங்கள்) வீடுவாடகைக்கு கொடுத்தவர்கள்தான் பதில் சொல்லவேண்டும்..எனவே வீடுவாடகைக்கு கொடுப்பவர்கள் மிகுந்த பொறுப்புடனும் கண்காணிப்புடன் இருக்கவேண்டும்.
குடியிருப்பவரின் நடத்தையில் மாற்றம் தென்படுமாயின் விசாரியுங்கள் அவர்களது பாதுகாவலருக்கு தெரியப்படுத்துங்கள்..உங்களால் ஒரு உயிர்காப்பாற்றப்படலாம்