கும்பகோணத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டு 5 நாட்களே ஆன நிலையில் பள்ளி ஆசிரியை ஒருவர் காதலானால் கழுத்தை அறுத்துக் கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டதாக கூறி காதலை முறித்துக் கொள்ள முயன்ற இளம் ஆசிரியையை கொலை செய்த கொடூர காதலன் கைது செய்யப்பட்டுள்ளான்.
தமிழ்நாட்டில் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள பாபநாசம் 108 சிவாலயம் பகுதியைச் சேர்ந்த குமரவேல் என்பவரது மகள் வசந்தபிரியா. இவர் கும்பகோணத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.
இவர் கும்பகோணம் அருகேயுள்ள உமாமகேஸ்வரபுரம் பகுதி காவிரி ஆற்றின் படித்துறையில் இருந்து கழுத்தில் கத்தியால் அறுக்கப்பட்டு ரத்தம் சொட்டிய நிலையில், ஒடி வந்து சாலையில் சரிந்து விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது.