பிரதமர் அலுவலகத்தின் ஆவணங்களை பயன்படுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் சாகல ரத்நாயக்க வெளியிட்ட அறிக்கை செல்லுப்படியற்றது என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் சாகல ரத்நாயக்க பிரதமர் அலுவலகத்தின் பிரதானியாக முன்னிற்பது, சட்ட விரோதமானது மட்டுமன்றி அது செல்லுபடியற்றது என்று பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் இன்று அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ள பிரதமரின் ஊடகச் செயலாளர் ரொஹான் வெலிவிட்ட இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் அதில், “இம்மாதம் முதலாம் திகதி சாகல ரத்நாயக்கவினால் வௌியிடப்பட்ட அறிக்கையை முற்றாக நிராகரிக்கப்பட வேண்டியது. அதற்கு பிரதமர் அலுவலகமோ பிரதமரோ எவ்வித தொடர்பும் இல்லை.
பிரதமர் அலுவலகத்தின் முகரியுடைய கடிதத்தை பயன்படுத்தி பாராளுமன்ற உறுப்பினர் சாகல ரத்நாயக்க வௌியிட்டுள்ள அறிக்கை செல்லுபடியற்ற மற்றும் உண்மையற்ற தகவல்களை உள்ளடக்கியது.
அத்துடன் சகல ரத்நாயக்க என்ற பெயரில் எவரும் பிரதமர் அலுவலகத்தில் பணியாற்றுவதில்லை” என்றும் ரொஹான் வெலிவிட்ட அதில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.