பொதுவாக இறந்த வீட்டில் இறந்தவர்களை காண சொந்தங்கள், அக்கம் பக்கத்தினர் என அனைவரும் கடைசியாக ஒரு முறை இறந்தவரின் முகத்தை காண வருவார்கள்.
அங்கு துக்கம் விசாரிக்கவும், சோகத்துடனும் தான் காணப்படுவார்கள். அவரை அடக்கம் செய்ய முறையான வழிபாடுகளை செய்து மயானத்திற்கு கொண்டு சென்று அடக்கம் செய்வார்கள்.
ஆனால் அவரை நல்ல முறையில் அடக்கம் செய்ய பட்டாசு வெடித்தும், மலர்களை தூவியவாறு வழி அனுப்புவார்கள். ஆனால் இங்கு சற்று வித்தியாசமாக குறித்த காணொளியில் பெண்கள் சிலர் இறந்தவரின் முன்பு சாவு குத்து ஆட்டம் ஆடுகிறார்கள். அவர்கள் இறந்த பெண்ணின் மருமகள்கள் தானாம்.
தற்போது இந்த காட்சி சமூக வலைத்தளத்தில் தீயாய் பரவி வருகிறது. இதை பார்த்த நெட்டிசன்கள் ஏம்மா இதான் சாவு குத்தா என்று தங்களின் கருத்துகளை கூறிவருகிறார்கள்.