முல்லைத்தீவு, செம்மலை- நாயாறு, நீராவியடி பிள்ளையார் ஆலயம் இருந்த இடத்தில் திடீரென புத்தர் சிலை நிறுவப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த பகுதியில் இராணுவ அதிகாரிகளின் உதவியுடன் நேற்று இச்சிலை நிறுவப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.மேலும் மகிந்த ஐனாதிபதியாக இருந்த காலத்தில் 2013 ஆண்டு குறித்த பிரதேசம் தொல்லியல் திணைக்களத்துக்குரியதென பிரகடனப்படுத்தப்பட்டது. மேலும் அங்கு விகாரையொன்றை நிறுவ முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் மக்கள் பல போராட்டங்களை நடத்திக் கொண்டிருப்பதுடன் நீதிமன்றத்திலும் வழக்கு தாக்கல் ஒன்றை செய்தனர். இந்நிலையில் மஹிந்த புதிய பிரதராக தெரிவு செய்யப்பட்டமையை தொடர்ந்து நீதிமன்ற தடை எதனையும் பொருட்படுத்தாது தற்போது புத்தர் சிலை நிறுவப்பட்டுள்ளது.
மகிந்த பிரதமரானதும், நீதிமன்ற உத்தரவை மீறி……….
Loading...
Loading...
Loading...