குடிபோதையில் விமானம் ஓட்ட வந்த விமானி கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
லண்டன் நகரில் உள்ளது ஹீத்ரு விமான நிலையம் அந்த நிலையத்திலிருந்து செல்லவிருந்த ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானத்தை செலுத்த இருந்த விமான ஓட்டி, இணை விமான ஓட்டி மற்றும் குழுவினர் ஒரு பேருந்து மூலம் சென்றுள்ளனர். அப்போது அந்த பேருந்து ஓட்டுனர் ஒரு வகையான மணம் வீசுவ்தைக் கண்டு ஏதோ தவறு உள்ளதாக உணர்ந்தார்.
அந்த மணம் விமானத்தின் இணை விமான ஓட்டியிடம் இருந்து வருவதை அறிந்த் அந்த் பேருந்து ஓட்டுனர் இது குறித்து விமான நிலைய அதிகாரியிடம் தகவல் தெரிவித்தார். சுமார் 42 வயதான அந்த இணை விமான ஓட்டியின் பெயர் கைசுதோஷி ஜிட்சுகாவா ஆகும்.
அவரை மூச்சு பரிசோதனை செய்ததில் பிரிட்டன் சட்டப்படி அனுமதிக்கப்பட்ட ஆல்கஹாலை விட அவர் 10 மடங்கு அதிகம் மது அருந்தியது தெரிய வந்துள்ளது. அவரை விமானம் கிளம்புவதற்கு 50 நிமிடம் முன்பு விமான நிலைய காவல்துறையினர் கைது செய்தனர்.
ஜிட்சுகாவா தாம் மது அருந்தியதை ஒப்புக் கொண்டு மன்னிப்பு கோரி உள்ளார். அவர் தாம் விமான ஓட்டியுடன் சேர்ந்து விமானம் செலுத்துவதற்கு சுமார் ஒரு மணி நேரம் முன்பு இரண்டு பாட்டில் ஒயின் மற்றும் 4 கேன்கள் பியர் அருந்தியதையும் ஒப்புக் கொண்டுள்ளார்.
ஜிட்சுகாவா உக்ஸ்பிரிட்ஜ் நீதிமன்றத்தில் தாம் குற்றத்தை ஒப்புக் கொள்வதாக தெரிவித்தார். வரும் 29 ஆம் தேதி அன்று நீதிமன்றம் அவருக்கு தீர்ப்பு வழங்கௌள்ளது. அது வரை அவர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட உள்ளார்.