யாழ். குடத்தனை பகுதியிலுள்ள வீடுகளுக்குள் அதிகாலையில் புகுந்து தாக்குதல் மேற்கொண்ட சம்பவத்தில் படுகாயமடைந்திருந்த பெண் ஒருவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.
யாழ்.வடமராட்சி கிழக்கு குடத்தனை மாளிகைத்திடல் கிராமத்தில் உள்ள இரண்டு வீடுகளுக்குள் கடந்த 29 ஆம் திகதி,
அதிகாலை புகுந்த தாக்குதலாளி உறக்கத்தில் இருந்த இரண்டு குடும்பங்களை சேர்ந்த கணவன் மனைவி மீது தாக்குதல் மேற்கொண்டனர்.
இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததுடன் மூவர் படுகாயமடைந்தனர்.
அதில் படுகாயமடைந்திருந்த ஜெயஸ்ரீ நிர்மலாதேவி (வயது 53) என்பவரே சிகிச்சை பயனின்றி வைத்திய சாலையில் உயிரிழந்துள்ளார்.
சம்பவ தினத்தன்று உயிரிழந்த பரம்சோதி ஜெயஸ்ரீ (வயது 66) என்பவரின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.
குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த எம். சித்திரவடிவேல் (வயது 50) அவரது மனைவி சி. ஜெயந்தி (வயது 40) ஆகிய இருவரும் யாழ்.போதனா வைத்திய சாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.