பிரான்சின் டூல்ஹவுஸ் நகர வீதியில் ராட்சத இயந்திர சிலந்தி நடமாடியதை பொதுமக்கள் கண்டு வியப்படைந்தனர்.
டூல்ஹவுஸ் நகரில் நடைபெறும் இயந்திர கண்காட்சிக்கு என பிரத்யேகமாக ராட்சத வடிவில் இயந்திரத்திலான சிலந்தி வடிவமைக்கப்பட்டது. இந்த சிலந்தி 43 அடி உயரமுடைய அரியானா எனும் இந்த சிலந்தி, 65 அடி தூரம் வரை கால் பரப்பிச் செல்லக்கூடியது. மற்றும் 38 டன்கள் எடை கொண்டது.
இதே போன்று வேறு சில பூச்சிகளும் இயந்திர வடிவில் வீதிகளில் நடமாடியது பொதுமக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. குறிப்பாக 46 அடி உயரமுடைய ஆஸ்டேரியன் என்ற பூச்சியும் காணப்பட்டது.
இவற்றைத் தவிர எருது தலையுடைய ராட்சத மனித உருவ இயந்திரம் ஒன்றும் நடமாடியது. இது 50 அடி உயரத்திற்கு உருவாக்கப்பட்டிருந்தது. இந்த இயந்திரங்களை இயக்க சுமார் ஒரு டஜன் ஆபரேட்டர்கள் பயன்படுத்தப்பட்டனர்.
முடிந்தவரை உயிருடன் இருப்பது போன்ற மாயையை இந்த இயந்திர பூச்சிகளுக்கு உருவாக்கினர். மேலும் இவற்றின் ஒவ்வொரு உடல் அசைவும் துல்லியமாக கணக்கிடப்பட்டது.