தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சி தாவுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பிலிருந்து கட்சி தாவிப் பிரதி அமைச்சுப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட வியாழேந்திரனுக்கு நெருக்கமான நாடாளுமன்ற உறுப்பினரே, விரைவில் கட்சி தாவக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
கனடாவுக்குச் சென்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன், நாடு திரும்பும் போது, கட்சி தாவக் கூடும் என்று எதிர்பார்க்கப்படும் நாடாளுமன்ற உறுப்பினரும் அலைபேசியில் கதைத்துள்ளார். கட்சி தாவும் தனது நிலைப்பாட்டை அந்த நாடாளுமன்ற உறுப்பினரிடம் கூறியபோது, அது புத்திசாலித்தனமான முடிவு என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
வியாழேந்திரன் கட்சி தாவிய பின்னரும், அவரது முடிவு புத்திசாலித்தனமானது என்று அந்த நாடாளுமன்ற உறுப்பினர் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர் ஒருவரிடமும் நேரடியாகத் தெரிவித்துள்ளார். இதனால் அந்த நாடாளுமன்ற உறுப்பினர் கட்சி தாவலாம் என்று கூறப்படுகின்றது.
இதனால் கூட்டமைப்பின் தலைவர் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளதாக கூறப்படுகிறது..