இலங்கை நாடாளுமன்றம் கூட்டப்படுமா? இல்லையா? என்ற சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதற்கமைய வெகு விரைவில் நாடாளுமன்றத்தை கூட்டுவேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து கருத்து வெளியிட்ட ஜனாதிபதி,
“எங்களுக்கு போதுமான பெரும்பான்மையுள்ளது. நாடாளுமன்றம் விரைவில் கூடும். நாட்டில் ஆட்சி மாற்றம் அமைதியானதாக காணப்படும். நல்லாட்சி அரசாங்கத்தின் கொள்கைகள் மேலும் வலுப்படுத்தப்படும்.
நல்லிணக்கம் தொடர்பான வாக்குறுதிகளை நாங்கள் நிறைவேற்றுவோம். அத்துடன் எமது சர்வதேச கடப்பாடுகளை நிறைவேற்றுவோம் என நாங்கள் சர்வதேச சமூகத்திற்கு வாக்குறுதியளித்துள்ளோம்” என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.