தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கடும் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
டுவிட்டர் பதிவொன்றின் ஊடாக அவர் தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அந்த பதிவில், “தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் சொந்த நலனிற்காக ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கின்றனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் தங்கள் சொந்த மக்களின் உண்மையான தேவைகள் குறித்து ஒரு போதும் சிந்திக்கவில்லை.
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் என்ன முடிவை எடுத்தாலும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் அது குறித்து கவலைப்படாமல் வடக்கு கிழக்கு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முயற்சிப்பார்கள்.
முன்னாள் விடுதலைப்புலிகள் உறுப்பினர்களின் புனர்வாழ்வு குறித்தும் கவனம் செலுத்துவார்கள்” என நாமல் குறிப்பிட்டுள்ளார்.