உடலின் ஆரோக்கியத்திற்கும், தேவையான ஊட்டச்சத்திற்கும் மிகவும் முக்கியமானவை பழங்களாகும்.
பொதுவாகவே பழங்கள் சத்துக்கள் நிறைந்தவை. ஒவ்வொரு பழத்திற்கும் ஒரு தனித்துவமும், சிறப்பும் இருக்கிறது.
நம் உடலுக்கு எண்ணற்ற நன்மைகளை வழங்கும் ஒரு பழத்தை பற்றி நமக்கு தெரியவில்லை. அதுதான் மங்குஸ்தான் பழம்.
மங்குஸ்தான் பழம் பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடியது. வாசனைமிகுந்த, சுவையான இந்த பழம் வருடம் முழுவதும் கிடைக்காது ஆனால் கிடைக்கும்போதெல்லாம் இதனை தவறாமல் வாங்கி சாப்பிடுங்கள்.
இது உங்கள் உடலின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும், செயல்பாட்டுக்கும் மிகவும் அவசியம்.
புற்றுநோய்
மங்குஸ்தான் பழத்தில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்கள் புற்றுநோய் மற்றும் இதய கோளாறுகளை குணப்படுத்துவதில் முக்கியப்பங்கு வகிக்கிறது.
இது சக்திவாய்ந்த மற்றும் பயனுள்ள ஆன்டிஆக்சிடன்ட் ஆகும் இது செல்லுலர் ரெஸ்ட் எனப்படும் இதய அழுத்தத்தை ஏற்படுத்தும் மருத்துவக்கோளாறை சரிசெய்ய உதவுகிறது.
இதன் ஒரு சுளைக்கு இவ்வளவு சக்தி இருக்கா என்று நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.