யாழ்ப்பாணம் நகர பகுதியில் அமைந்துள்ள பிரபல சைவ உணவகம் ஒன்றில் ஒரு நபர் உணவருந்தி கொண்டிருந்த போது அவருக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
அவர் சாப்பிட்டு கொண்டிருந்த இலையில் சோற்றில் இருந்து அட்டை ஒன்று வெளியில் வந்துள்ளது.
உடனே அதிர்ச்சி அடைந்த நபர் அங்கிருந்தே முகப்புத்தக நேரலையில் இந்த விடயத்தை பொதுமக்களுக்கு வெளிப்படுத்தியுள்ளார்.
யாழ் நகரத்தில் இயங்கி வரும் இந்த உணவகத்தில் இதற்கு முன்னரும் சுகாதார சீர்கேடுகள் தொடர்பில் முறையிடப்பட்டு இருந்த போதும் இதுவரை எந்தவிதமான் ஆக்கபூர்வ நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், குறித்த கடையின் முதலாளி வெளியூர் சென்றிருந்ததாகவும் சம்பவத்தை கேள்வியுற்று உடனடியாக சம்மந்தப்பட்ட இளைஞனுடன் பேச்சு வார்த்தை நடாத்தி குறித்த வீடியோவை அவரது முகபுத்தகத்தில் இருந்து நீக்கியுள்ளதாகவும் தெரியவருகின்றது.