காதலை ஏற்க மறுத்த மாணவியின் கழுத்தை ஆசிரியரே அறுத்து கொலை செய்ய முயன்ற சம்பவம் ஒன்று ஆந்திராவில் இடம்பெற்றுள்ளது.
ஆந்திரப்பிரதேச மாநிலம் குர்நூல் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் இந்தி ஆசிரியராக பணியாற்றி வருபவர் சங்கர்.
இவர் அதே பள்ளியில் படித்த 9 ஆம் வகுப்பு மாணவியை ஒருதலையாக காதலித்ததாக தெரிகிறது. ஆனால் அந்த மாணவி ஆசிரியரின் காதலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சங்கர் இன்று காலை, மது போதையில் மாணவியின் வீட்டிற்கு சென்று அங்கு தனியாக இருந்த மாணவியின் கழுத்தை கத்தியால் அறுத்துள்ளார்.
மாணவியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த உறவினர்கள் வேகமாக மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதேசமயம் அங்கிருந்து தப்ப முயன்ற குற்றவாளி சங்கரை பிடித்து கட்டி வைத்து அடித்துள்ளனர்.
இந்த நிலையில் இச்சம்பவம் அறிந்து வந்த பொலிசார் குற்றவாளியை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Kurnool, AP – Private school Hindi teacher attacKed by mob after he attacked a 9th standard girl with blade.
Attempted to slit her throat and his own for she rejected his love advance.
Girl under treatment. pic.twitter.com/r7EcLwNCSq— Pramod Madhav (@madhavpramod1) November 3, 2018