05-11-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? விளம்பி வருடம், ஐப்பசி மாதம் 19ம் திகதி, ஸபர் 26ம் திகதி, 05-11-2018 திங்கட்கிழமை தேய்பிறை, திரயோதசி திதி இரவு 11:54 வரை; அதன் பின் சதுர்த்தசி திதி, அஸ்தம் நட்சத்திரம் இரவு 9:10 வரை; அதன்பின் சித்திரை நட்சத்திரம், சித்தயோகம்.
* நல்ல நேரம் : காலை 6:00-7:30 மணி
* ராகு காலம் : காலை 7:30-9:00 மணி
* எமகண்டம் : காலை 10:30-12:00 மணி
* குளிகை : மதியம் 1:30-3:00 மணி
* சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : பூரட்டாதி,உத்திரட்டாதி
பொது : முகூர்த்த நாள், மாத சிவராத்திரி, பிரதோஷ விரதம், நந்தீஸ்வரர் வழிபாடு.
மேஷம்:
மனதில் உற்சாகமும் செயல்களில் நேர்த்தியும் உருவாகும். தொழிலில் வியத்தகு அளவில் முன்னேற்றம் பெறும். பணவரவும் நன்மையும் அதிகரிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்வு ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு பதவி பெற அனுகூலம் உண்டு.
ரிஷபம்:
குடும்ப பிரச்னையை பிறரிடம் பேச வேண்டாம்.தொழிலில் இலக்கை நிறைவேற்ற கூடுதல் கால அவகாசம் தேவை.குடும்பச் செலவு அதிகரிக்கும்.தியானம் தெய்வ வழிபாட்டால் மனதில் அமைதி ஏற்படும்.
மிதுனம்:
சிலர் சுய லாபத்திற்காக உதவ முன்வருவர்.தொழிலில் உற்பத்தி விற்பனை அதிகரிக்க கூடுதல் முயற்சி உழைப்பு தேவை.குடும்பச் செலவு அதிகரிக்கும்.வெளியூர் பயணம் பயன் அறிந்து மேற்கொள்ளலாம்.
கடகம்:
மனதில் உயர்வு தாழ்வு கருதாமல் பழகுவீர்கள். சமூகத்தில் நன்மதிப்பு அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கை அடைவீர்கள். உபரி வருமானம் கிடைக்கும். பிள்ளைகள் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.
சிம்மம்:
சிலரின் அலட்சியமான பேச்சு வருத்தம் தரும்.தொழில் வியாபார நடைமுறை தாமத கதியில் இயங்கும். குடும்பச் செலவுகளில் சிக்கனத்தால் சிரமம் தவிர்ப்பீர், பணியாளர்களுக்கு சலுகைகள் கிடைக்கும். பெண்கள் திட்டமிட்டு செயல்பட வேண்டும்.
கன்னி:
அதிர்ஷ்டவசமாக முக்கியஸ்தர் ஒருவர் உதவுவார். தொழிலில் திட்டமிட்ட பணிகளை அக்கறையுடன் நிறைவேற்றுவீர்கள். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாகும்.விருந்தில் கலந்து கொள்வீர்கள்.பெண்கள் கலையம்சம் நிறைந்த பொருட்கள் வாங்குவர்.
துலாம்:
நன்மைகளை பெறுவதில் தாமதம் ஏற்படும்.தொழில் வியாபாரம் செழிக்க குறைகளை தாமதமின்றி சரிசெய்வது நல்லது.பிறர் பார்வைக்கு அதிக பணம் செலவு செய்ய வேண்டாம்.உடல் நலத்திற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம்.
விருச்சிகம்:
எதிரிகள் விலகி நன்னிலை உருவாகும்.புதிய திட்டங்களை சிறப்பாக வடிவமைப்பீர்கள்.தொழிலில் உற்பத்தி விற்பனையின் அளவு அதிகரிக்கும். கடனில் ஒருபகுதியை செலுத்துவீர்கள். பெண்கள் சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது.
தனுசு:
உத்வேக மனமுடன் பணிபுரிவீர்கள்.தொழிலில் உற்பத்தி விற்பனை அதிகரிக்கும்.கூடுதல் லாப விகிதம் கிடைக்கும். வீட்டை அழகுபடுத்த கலைப்பொருள் வாங்குவீர்கள்.பணியாளர்களுக்கு சலுகை வந்து சேரும்.
மகரம்:
நண்பரின் உதவியால் சில பணிகளை நிறைவேற்றுவீர்கள்.தொழிலில் அளவான உற்பத்தி விற்பனை உண்டு.புதிய இனங்களில் பணச்செலவு ஏற்படலாம்.நேரத்திற்கு உண்பதால் உடல் ஆரோக்கியம் பாதுகாக்கலாம்.
கும்பம்:
சமயோசிதமாக செயல்படுவது நல்லது.குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனை சில நன்மை தரும்.தொழில் வளர்ச்சியில் நேரம் தவறாமை அவசியம்.அளவான பணவரவு கிடைக்கும்.அதிக பயன்தராத பொருள் வாங்க வேண்டாம்.
மீனம்:
மனதில் புத்துணர்வும் நம்பிக்கையும் அதிகரிக்கும்.தொழில் வியாபாரத்தில் கூடுதல் மூலதனம் செய்வீர்கள்.உற்பத்தி விற்பனை அதிகரிக்கும்.உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.