சர்கார் படத்தின் டீசர் வெளியாகி ஒரே நாளில் பல சாதனைகளைப் படைத்தது. ஓர் இரவுக்குள் 1 கோடி பார்வைகள், 10 லட்சம் லைக்குகள் என புதிய உலக சாதனையை படைத்தது. அந்தப் படத்தின் சாதனையை முறியடிக்க சில காலம் ஆகும் எனக் கருதப்பட்டது.
ஆனால், பத்து நாட்களுக்குள் அந்த சாதனை முறியடிக்கப்பட்டுவிட்டது. ஷாரூக்கான், அனுஷ்கா சர்மா, காத்ரினா கைப் மற்றும் பலர் நடித்து வெளிவர உள்ள ஜீரோ படத்தின் டிரைலர் இரண்டு நாட்களுக்கு முன்பு யு டியூபில் வெளியிடப்பட்டது. வெளியான 24 மணி நேரங்களில் அந்த டிரைலர் புதிய இந்தியத் திரைப்பட சாதனையைப் படைத்தது.
4 கோடி பார்வைகளையும் 10 லட்சம் லைக்குகளையும் பெற்று புதிய சாதனையைப் படைத்தது. தற்போது அந்த டிரைலர் 6 கோடியே 40 லட்சம் பார்வைகளையும், 14 லட்சம் லைக்குகளையும் பெற்று புதிய சாதனையைப் படைத்துளளது. சர்கார் டீசர் பெற்ற 13 லட்சம் லைக்குகளை ஜீரோ டிரைலர் கடந்துவிட்டது.