குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாலை தினம் தினமும் குடித்து வருகின்றனர். இது அவர்களின் அன்றாட உணவில் ஒரு அங்கமாக உள்ளது.
பால் என்பது அதிக ஊட்டசத்துக்கள் நிறைந்த ஒரு உணவாகும். எனவேதான், பிறந்த குழந்தைக்கு தாய்ப்பாலை கொடுக்கின்றனர்.
நம்மில் பலர் பால் சார்ந்த உணவையே அதிகம் உண்ணுவதாக சில அறிக்கை கூறுகிறது.
ஆனால் பால் மட்டும் தனியாக குடித்தால் அது உடலுக்கு நன்மை தரும். மாறாக அதனுடன் வேறு சில உணவுகளையும் நாம் சேர்த்து சாப்பிட்டால் அவ்வளவுதான்.
பாலும் வாழைப்பழமும் நல்லதா..?
நம்மில் பலர் வாழைப்பழம் மற்றும் பால் சேர்த்த மில்க் ஷேக்கை அதிகம் விரும்பி அருந்துவோம். மேலும் சில இந்திய திருமண முறையில் பாலுடன் சேர்த்து வாழை பழத்தை மணமக்களுக்கு தருவார்கள்.
ஆனால் இது முற்றிலும் தவறான ஒன்றே. பாலையும் வாழைப்பழத்தையும் சேர்த்து உண்டால் அது வயிற்றுக்கு எரிச்சலை தரும். பாலில் உள்ள அதிக குளிர்ச்சி தன்மையும், வாழைப்பழத்தில் உள்ள அதிக வெப்ப தன்மையும் ஒன்றோடு ஒன்று சேர்ந்து செரிமானம் ஆகும்போது நச்சு தன்மையாகி விடும்.
எனவே இனி இந்த இரண்டையும் சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்கவும்.