சர்கார் விவகாரத்தில் மீண்டும் பாக்யராஜ் அதிரடி முடிவெடுத்துள்ளது பெருத்த சந்தேகத்தை கிளப்பியுள்ளது.
சர்கார் பட கதை விவகாரத்தில் கே பாக்யராஜ் தான் அசெளகரிய நிலைமைக்கு தள்ளப்பட்டதால், தனது தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்திருந்தார்.
அதைத் தொடர்ந்து பாக்யராஜின் ராஜினாமாவை ஏற்க முடியாது என தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் ஒருமனதாக முடிவெடுத்துள்ளது அறிக்கை வெளியிட்டதோடு, நீங்கள் தான் தலைவர் என தெரிவித்திருந்தனர்.
மீண்டும் ராஜினாமா :
இந்நிலையில் சர்கார் விவகாரத்தில் சன் பிக்ஸர்ஸிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மீண்டும் தன் ராஜினாமா கடிதத்தை தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்திற்கு அனுப்பியுள்ளார்.
ஆனால் எவ்வளவு நொந்து போய் இருந்தால் இப்படி மீண்டும் ராஜினாமா கடிதம் கொடுத்திருப்பார் இந்த மனிதர் என திரையுலகத்தினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.