சுவிட்சர்லாந்தில் உள்ள பெரும்பாலான மனநல மருத்துவமனைகளில் இளம் நோயாளிகள் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு இரையாவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக சுவிட்சர்லாந்தின் சித்திரவதை தடுப்புக்கான தேசிய ஆணையம் மேற்கொண்ட விசாரணையில் இது தெரியவந்துள்ளது.
சுவிட்சர்லாந்தில் செயல்படும் மனநல மருத்துவமனைகளில் பெரும்பாலும் இருபாலரையும் ஒன்றாகவே தங்க அனுமதிக்கின்றனர்.
சில மருத்துவமனைகளில் சிறார்களையும் இளைஞர்களுடன் ஒரே அறையில் தங்க வைக்கப்படுகிறார்கள்.
இது மருத்துவ ரீதியாக பலனை அளிக்கலாம் என்றாலும், பெரும்பாலான மருத்துவமனைகளில் இது பாலியல் துஸ்பிரயோகத்திற்கே வழிவகுத்துள்ளது.
இந்த ஆண்டு துவக்கத்தில் சூரிச்சில் உள்ள மனநல மருத்துவமனை ஒன்றில் சிறுவன் ஒருவர் மீது நடத்தப்பட்ட பாலியல் தாக்குதல் இதற்கு சான்று என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
பாஸெல் மாகாணத்தில் உள்ள மனநல பல்கலைக்கழக மருத்துவமனையில் 12 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டதும், ஆர்காவ் மாகாணத்தில் 2 பாலியல் புகார் வழக்குகளும் பதிவாகியுள்ளன.