Loading...
அவுஸ்திரேலியாவின் பிரபல சுற்றுலா தளத்தில் சுறாமீன் தாக்கியதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கடந்த இரண்டு மாதத்தில் நடந்த மூன்றாவது சுறாமீன் தாக்குதல் சம்பவமாக இது கருதப்படுகின்றது.
33 வயதுடைய அவுஸ்திரேலியரான Whitsunday என்பவரே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.
அவர் குழுமத் தீவுகளின் Cid Harbour பகுதியில் நீந்திக் கொண்டிருந்த போது சுறாமீன் அவரைக் கடித்துள்ளது.
Loading...
கடந்த செப்டம்பர் மாதம் 12 வயது சிறுமியும் 46 வயது நபரும் வெவ்வேறு நாட்களில் சுறாமீனால் தாக்கப்பட்டனர்.
அதில் 46 வயதான நபர் காயங்களினால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் குறித்த பகுதியில் சுறாமீன்கள் சிலவற்றை பிடித்து அழிக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது
Loading...