அம்பாறை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து பெய்துவரும் அடை மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக அம்பாறையின் பல்வேறு பகுதியில், வெப்ப சலனம் காரணமாக கடும் மழை பெய்து வருகிறது.
இதனால் பொத்துவில், திருக்கோவில், லகுகல, பாணமை, அம்பாறை, அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, பாலமுனை மற்றும் அதனை சுற்றியுள்ள நெல் வயல்கலும் வெள்ளக் காடாக காட்சியளிக்கின்றன.
எனவே, அநேகமான உள் வீதிகள் நீரில் மூழ்கியுள்ள தோடு, உள்ளுர் போக்குவரத்துக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக, தாழ்ந்த பிரதேசங்களிலுள்ள மக்களின் குடியிருப்பு வீடுகள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும், அந்த பகுதிகளில் கடல் கொந்தளிப்பாக இருப்பதனால் அந்த பகுதி மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்லவில்லை. இதனால் கடற்றொழில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
சில பிரதேசங்களில் வடிகான்கள் துப்பரவு செய்யப்படாமலுள்ளதால் மழை நீர் வடிந்தோட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.