Loading...
மட்டக்களப்பு – வாகரை பிரதேசத்தின் பல பகுதிகள் தற்போது பெய்து வரும் மழை காரணமாக வெள்ளத்தில் மூழ்கும் அபாயத்தில் காணப்படுகின்றது.
வாகரை – கதிரவெளி, பத்தினி அம்மன் ஆலயம் மற்றும் வாகரை, மாரியம்மன் ஆலயம் ஆகியன வெள்ளநீர் காரணமாக மூழ்கும் நிலையில் காணப்படுகின்றது.
Loading...
இதனால், கேதார கௌரி விரதம் அனுஷ்டிப்போர் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, வாழைச்சேனை பிரதேச செயலக பிரிவில் அமைக்கப்பட்ட செமட்ட செவ வீட்டுத்திட்டத்தில், வாழைச்சேனை மற்றும் முறாவோடை பகுதி வீட்டுத் திட்டம் வெள்ளத்தில் மூழ்கி காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
Loading...