திருகோணமலை – சேருநுவர பகுதியில் 16 வயதுடைய சிறுமியொருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சேருநுவர- கல்லாறு பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய நபர் ஒருவரே இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் குறித்த சிறுமியை மூன்று வருடங்களாக காதலித்து பல இடங்களுக்கும் அழைத்துச் சென்று தங்கி நின்று வந்துள்ளார்.
ஆனால் தற்போது வேறு ஒரு பெண்ணோடு சுற்றித் திரிவதாக குறித்த சிறுமி மற்றும் சிறுமியின் பெற்றோர் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சந்தேக நபரை தடுத்து வைத்துள்ளதோடு மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்