மட்டக்களப்பு – மஹாஓயா, நுவரகலதென்ன பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் காணாமல் போயுள்ளதையடுத்து பொலிஸார் அந்நபரை தேடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
62 வயதுடைய எஸ்.எம்.திஸ்ஸஹாமி எனும் விவசாயியே இவ்வாறு கடந்த முதலாம் திகதியிலிருந்து காணாமல் போயுள்ளதாக அவரது மனைவி மஹாஓயா பொலிஸில் முறைப்பாட்டு வாக்கு மூலம் பதிவு செய்துள்ளார்.
விவசாயக் கூலி வேலையில் ஈடுபடும் இவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்க பெற்ற முறைப்பாட்டை அடுத்து குறித்த நபர் தேடப்பட்டு வருவதாக மஹாஓயா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவரைத் தேடும் பணிகள் மட்டக்களப்பு பதுளை வீதி காட்டுப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட போதிலும் இதுவரைக் கண்டு பிடிக்க முடியவில்லை எனவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் பற்றி பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.