07-11-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? விளம்பி வருடம், ஐப்பசி மாதம் 21ம் திகதி, ஸபர் 28ம் திகதி, 07-11-2018 புதன்கிழமை தேய்பிறை, அமாவாசை திதி இரவு 10:15 வரை; அதன்பின் பிரதமை திதி, சுவாதி நட்சத்திரம் இரவு 8:45 வரை;
அதன்பின் விசாகம் நட்சத்திரம், சித்தயோகம்.
* நல்ல நேரம் : காலை 9:00–10:30 மணி
* ராகு காலம் : மதியம் 12:00-1:30 மணி
* எமகண்டம் : காலை 7:30-9:00 மணி
* குளிகை : காலை 10:30-12:00 மணி
* சூலம் : வடக்கு
பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : ரேவதி, அசுவினி
பொது : அமாவாசை விரதம், லட்சுமி நரசிம்மர் வழிபாடு.
மேஷம்:
திட்டமிட்ட பணிகள் நிறைவேற முன்னேற்பாடு செய்வீர்கள். குடும்பத்தினர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாக இருக்கும். சுபச்செலவு செய்து மகிழ்வீர்கள்.
ரிஷபம்:
உறவினரிடம் பெற்ற உதவிக்கு உபகாரம் செய்வீர்கள். தொழில், வியாபார வளர்ச்சியால் வருமானம் உயரும். பிள்ளைகளின் தேவையறிந்து நிறைவேற்றுவீர்கள். பணியாளர்கள் சலுகை பெறுவர். வெகுநாள் காணாமல் தேடிய பொருள் கைவந்து சேரும்.
மிதுனம்:
உங்களின் நற்பெயரை பாதுகாத்துக் கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் மறைமுகப் போட்டி அதிகரிக்கும். சுமாரான பணவரவு கிடைக்கும். சீரான ஓய்வு உடல் நலனைப் பாதுகாக்கும். பெண்கள் மற்றவரிடம் குடும்ப விஷயத்தை பேச வேண்டாம்.
கடகம்:
விரைந்து செயல்பட்டால் திட்டமிட்ட பணி நிறைவேறும். தொழிலில் உற்பத்தி, விற்பனை சுமாராக இருக்கும். குறைந்த அளவில் பணவரவு கிடைக்கும். மாமன், மைத்துனர் உதவிகரமாக நடப்பர். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.
சிம்மம்:
எதிரிதொல்லை செயலிழந்து போகும். புதிதாக வருகிற பொறுப்பை திறம்பட நிறைவேற்றுவீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும். ஆதாயம் பன்மடங்கு உயரும். பெண்கள் விரும்பிய உணவு வகைகளை உண்டு மகிழ்வீர்கள்.
கன்னி:
அறிமுகமில்லாதவரிடம் நெருக்கம் வேண்டாம். தொழில், வியாபாரம் செழித்து வளர கூடுதல் பணிபுரிவது அவசியம். பணச்செலவில் சிக்கனம் சிரமம் தவிர்க்க உதவும். உணவுப்பொருள் தரம் அறிந்து உண்பது நல்லது. வீடு, வாகனத்தில் பாதுகாப்பு நடைமுறையைப் பின்பற்றவும்.
துலாம்:
செயல்களில் நேர்மை நிறைந்திருக்கும். தாமதமான பணியை உற்சாகமுடன் நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி திருப்திகரமாக இருக்கும். சேமிக்கும் விதத்தில் லாபம் வரும். குடும்பத்தேவை தாராள செலவில் நிறைவேறும்.
விருச்சிகம்:
சுயமாக சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில், வியாபார நடைமுறை சராசரி அளவில் இயங்கும். லாபம் சீராக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாவர். தியானம், இஷ்ட தெய்வ வழிபாடு நிம்மதிக்கு வழிவகுக்கும்.
தனுசு:
நண்பரிடம் கலைரசனையுடன் பேசுவீர்கள். உங்கள் மீதான நன்மதிப்பு அதிகரிக்கும். தொழிலில் உற்பத்தி விற்பனை இலக்கு குறித்த காலத்தில் பூர்த்தியாகும். உபரி பணவரவு கிடைக்கும். பிள்ளைகளின் விருப்பம் அறிந்து செயல்படுவீர்கள்.
மகரம்:
முக்கிய திட்டம் ஒன்றை செயல்படுத்துவீர்கள். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி பணி மேற்கொள்வீர்கள். நிலுவைப்பணம் வசூலாகும். பெண்கள் ஆன்மிக சிந்தனையுடன் செயல்படுவர்.
கும்பம்:
சுயகவுரவத்திற்கு பாதிப்பு வராமல் செயல்படவும். தொழிலில் உருவாகிற இடையூறை உடனடியாக சரிசெய்வது நல்லது. லாபம் சுமார். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாவர். வெளியூர் பயணம் பயனறிந்து மேற்கொள்ளவும்.
மீனம்:
எதிர்பார்த்த உதவி கிடைக்க தாமதமாகலாம். தொழிலில் திட்டமிட்ட இலக்கை அடைய விடாமுயற்சி தேவை.பணியாளர்கள் பணிவிஷயமாக வெளியூர் செல்வர். வீட்டுச்செலவு அதிகரிக்கும். சிலருக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம்.