மது போதையில் தண்டவாளத்தில் தள்ளாடிய நிலையில் ரயில் மோதி சூரிச் நகரில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞர் மது அருந்துவதில்லை எனவும், இது திட்டமிட்ட கொலையாக இருக்கலாம் எனவும் அவரது நண்பர்கள் கூறியுள்ளனர்.
சுவிட்சர்லாந்தின் சூரிச்சில் ஞாயிறன்று மாலை சுமார் 6.30 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படும் நிலையில் ரயில் நிலையம் அருகே அமைந்துள்ள தண்டவாளம் வழையாக குறித்த இளைஞர் நடந்து சென்றதாக பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த இளைஞன் அப்பகுதி வழியாக சென்றமைக்கான காரணம் தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது.
ரயில் விபத்தில் கொல்லப்பட்டவரின் அடையாளம் தெரியவில்லை எனவும் மாகாண பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பில் பேசிய இரு இளைஞர்கள்,
தாங்கள் மூவரும் மிக குறைந்த அளவுக்கு மது அருந்தியதாகவும், குடியிருப்புக்கு திரும்பும் வழியில் அவர் மட்டும் தனியாக சென்றதாகவும், அவரது மரணத்திற்கு என்ன காரணம் என தங்களுக்கு தெரியவில்லை எனவும் கூறியுள்ளனர்.
மாகாண பொலிசாரின் விசாரணைக்கு பின்னரே இந்த விவகாரம் தொடர்பில் உண்மை வெளிவரும் என கூறப்படுகிறது.