எரிபொருள் பவுசரும் மோட்டார் சைக்கிளும் மோதுண்டு ஏற்பட்ட கோர விபத்தில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்தனர்.
கிளிநொச்சியில் ஏ9 வீதியில் தீபாவளி தினமான இன்றிரவு 7.30 மணியளவில் இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றது.
“கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு எரிபொருள் விநியோகத்துக்கு பயணித்துக் கொண்டிருந்த எரிபொருள் பவுசரும் பரந்தன் பகுதியிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேரி மோதி விபத்துக்குள்ளாகியது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர்கள் இருவரும் உயிரிழந்தனர்.
ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் வைத்தியசாலைக் கொண்டு சென்ற போது உயிரிழந்தார்.
கிளிநொச்சி செல்வாநகரைச் சேர்ந்த செல்வராஜா கஜீபன் (வயது-18) என்று இளைஞர் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு மற்றைய இளைஞன் அடையாளம் காணப்படவில்லை” என்று பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் கிளிநொச்சிப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.