மதுரையில் நடுரோட்டில் வைத்து இளைஞர் ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை – சிவகங்கை சாலை பகுதியில் இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டதுடன்,உடல் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் பாதி எறிந்த நிலையில் கிடந்த இளைஞரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து, பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், எரித்துக்கொலை செய்யப்பட்ட இளைஞர் மதுரை பனங்காடி பகுதியை சேர்ந்த அரவிந்த் என்பதும், சிவகங்கையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து வீடு திரும்பிய போது தான், மர்ம கும்பல் வழி மறித்து வெட்டி கொலை செய்துவிட்டு உடலை எரித்திருப்பதும் தெரியவந்தது.
அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் இச்சம்பம் முன்விரோதம் காரணமாக நடந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.