Loading...
திருகோணமலை தோப்பூர் பகுதியில் எழுபதாயிரம் ரூபாயினை தாபரிப்பு பணமாக செலுத்தாது இருந்த நபர் ஒருவரை இம்மாதம் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம்சம்சுதீன் இன்று உத்தரவிட்டுள்ளார்.
செல்வநகர், தோப்பூர் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
Loading...
குறித்த சந்தேக நபர் ஒரு பிள்ளைக்கு மாதாந்தம் பத்தாயிரம் ரூபாய் செலுத்தி வந்த நிலையில் ஏழு மாதங்களாக தாபரிப்பு பணம் செலுத்தாது இருந்துள்ளார்.
இந்நிலையில் அவரின் மனைவி பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய கைது செய்யப்பட்டு, மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
Loading...