08-11-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? விளம்பி வருடம், ஐப்பசி மாதம் 22ம் திகதி, ஸபர் 29ம் திகதி, 08-11-2018 வியாழக்கிழமை வளர்பிறை, பிரதமை திதி இரவு 10:06 வரை; அதன்பின் துவிதியை திதி, விசாகம் நட்சத்திரம் இரவு 9:13 வரை;
அதன்பின் அனுஷம் நட்சத்திரம், சித்தயோகம்.
* நல்ல நேரம் : காலை 10:30-12:00 மணி
* ராகு காலம் : மதியம் 1:30-3:00 மணி
* எமகண்டம் : காலை 6:00-7:30 மணி
* குளிகை : காலை 9:00-10:30 மணி
* சூலம் : தெற்கு
பரிகாரம் : தைலம்
சந்திராஷ்டமம் : அசுவினி, பரணி
பொது : கந்த சஷ்டி விரதம் ஆரம்பம், முருகன், தட்சிணாமூர்த்தி வழிபாடு.
மேஷம்:
எதிர்கால நலனில் கூடுதல் அக்கறை கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் நவீன மாற்றம் பின்பற்றுவீர்கள். லாபம் உயரும்.
உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைப்பு வரும். அரசியல்வாதிகள் விரும்பிய பதவி பெற அனுகூலம் உண்டு.
ரிஷபம்:
திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். புதிய முயற்சியில் ஈடுபடுவீர்கள். தொழில், வியாபார அபிவிருத்தியால் புதிய சாதனை உருவாகும்.
தாராள பணவரவு கிடைக்கும். நண்பருடன் விருந்து விழாவில் பங்கேற்பீர்கள். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர்
மிதுனம்:
உங்களின் கருத்தை குடும்பத்தினர் ஏற்கத் தயங்குவர். தொழிலில் உள்ள அனுகூலத்தைப் பாதுகாப்பது நல்லது.
மிதமான பணவரவு கிடைக்கும். பிறர் பொருட்களை பாதுகாக்கும் பொறுப்பு ஏற்க வேண்டாம். பிள்ளைகளின் செயல்பாடு நிம்மதி அளிக்கும்.
கடகம்:
பகைமை குணம் உள்ளவர் அவமதித்து பேசுவர். பெருந்தன்மையுடன் விலகிச் செல்வீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனை சராசரி அளவில் இருக்கும்.
லாபம் சுமார். பெண்களுக்கு வீட்டுச் செலவில் சிக்கனம் தேவை. நண்பரால் உதவி உண்டு.
சிம்மம்:
இளமைக்கால இனிய நிகழ்வுகளை பேசி மகிழ்வீர்கள். நேர்த்தியுடன் பணிபுரிந்து தொழிலில் வளர்ச்சி இலக்கை அடைவீர்கள்.
உபரி பணவரவு சேமிப்பாகும். பெண்கள் கலையம்சம் நிறைந்த பொருள் வாங்குவர். அரசு வகையில் நன்மை உண்டாகும்.
கன்னி:
அவசரப் பணி உருவாகி சிரமம் தரலாம். தொழில், வியாபாரத்தில் இடையூறுகளை தாமதமின்றி சரி செய்யவும். பிள்ளைகளின் வழியில் செலவு அதிகரிக்கும்.
சொத்து, ஆவணம் பிறர் பொறுப்பில் தரக் கூடாது. தாயின் பேச்சு ஆறுதல் அளிக்கும்.
துலாம்:
சிந்தனை செயலில் புதிய மாற்றம் உருவாகும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழிலில் உற்பத்தி விற்பனை திருப்திகரமாக இருக்கும்.
சேமிக்கும் அளவில் பணவரவு கிடைக்கும். மனைவியின் அன்பைக் கண்டு மகிழ்வீர்கள்.
விருச்சிகம்:
சிலரின் பேச்சால் வருத்தத்திற்கு ஆளாவீர்கள். தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். லாபம் சுமாராக இருக்கும்.
பணியாளர்களுக்கு சலுகை பெறுவதில் தாமதம் ஏற்படும். பெண்கள் நேரத்திற்கு உண்பதால் ஆரோக்கியம் சீராகும்.
தனுசு:
சமூக நிகழ்வுகள் இனிதாக அமைந்திடும். மனதில் உற்சாகம் மேலோங்கும். தொழிலில் உற்பத்தி, விற்பனை உயர்வால் லாபம் கூடும்.
பணியாளர்களுக்கு பாராட்டு வெகுமதி வந்து சேரும். பெண்கள் குடும்ப வளர்ச்சி கண்டு பெருமிதம் காண்பர்.
மகரம்:
வாழ்வில் வளம் பெற புதிய வாய்ப்பு கிடைக்கும். உறவினர் மூலம் எதிர்பார்ப்பு நிறைவேறும். தொழிலில் திட்டமிட்ட இலக்கை அடைவீர்கள்.
லாபம் பன்மடங்கு உயரும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர்.
கும்பம்:
மனதில் சங்கடம் ஏற்பட்டு மறையும். சொந்த பணிகளில் கவனம் கொள்வது நல்லது. தொழிலில் உற்பத்தி, விற்பனை சுமாராக இருக்கும்.
பெண்கள் அத்தியவாசிய செலவுக்கு கடன் வாங்க நேரிடும். பெற்றோரின் தேவையறிந்து நிறைவேற்றுவீர்கள்.
மீனம்:
பேச்சு, செயலில் நிதானம் பின்பற்றவும். தொழிலில் திட்டமிட்ட இலக்கை அடைய கூடுதல் அவகாசம் தேவைப்படும். அளவான பணவரவு கிடைக்கும்.
பெண்கள் பயன் தராத பொருள் வாங்க வேண்டாம். பிள்ளகைளின் நற்செயல் மனதை மகிழ்விக்கும்.