பதவி கவிழ்க்கப்பட்ட முன்னாள் பிரதமர் தங்கியுள்ள அலரி மாளிகையின் தற்போதைய நிலைமை குறித்து மஹிந்த தரப்பினர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர், பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதன் பின்னர் அலரி மாளிகையில் கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் தங்கியுள்ளனர்.
புதிய பிரதமரை ஜனாதிபதி நியமித்தாலும், தானே இன்றும் உத்தியோகபூர்வ பிரதமர் என அறிவித்துள்ள ரணில் விக்ரமசிங்க, தொடந்தும் அலரி மாளிகையில் தங்கியுள்ளார்.
அலரி மாளிகைக்குள் இருப்பவர்கள் இரவில் பாடல் பாடி, நடனமாடி நேரத்தை செலவழித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் மக்கள் ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற தினத்தன்று, ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்கள் மகிழ்ச்சியாக நேரத்தை கழித்த காணொளி இணையத்தில் வெளியாகியுள்ளது.
அங்கு முன்னாள் பிரதி அமைச்சர் அஜித் பீ பெரேரா தங்கள் கட்சிக்காரர்களுடன் பாடல் பாடி நடனமாடுவதனை காண முடிந்துள்ளது.
பெரும்பான்மை பலத்தை இழந்துள்ள ரணில் தோல்வியை நெருக்கி விட்டார் என புதிய பிரதமரான மஹிந்த ராஜபக்ஷவின் தரப்பினர் தெரிவித்து வருகின்றனர்.
எனினும் அலரி மாளிகையில் மிகவும் சந்தோஷமான முறையில் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பது குறித்து மஹிந்த தரப்பினர்அச்சம் அடைந்துள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.