எதிர்வரும் 14ஆம் திகதி நாடாளுமன்றில் விசேட கட்டளையினைப் பிறப்பித்து, மஹிந்த ராஜபக்ஷவின் பிரதமர் விடயத்தினைக் விவாதத்திற்கு எடுக்கவுள்ளதாக, சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார்.
அவர் இன்று விடுத்துள்ள விசேட அறிக்கை மூலம் இதனை தெரியப்படுத்தியுள்ளார்.
சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று மாலை அவசரமாக கட்சித் தலைவர்களைச் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது, இக்கட்டான அரசியல் சூழ்நிலையினைச் சமாளிப்பது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இன்றைய சந்திப்பு குறித்தும் அதில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்தும் சபாநாயகர் அலுவலகத்தினால் இன்று மாலை விசேட அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘எதிர்வரும் 14 ஆம் திகதி கூடுகின்ற நாடாளுமன்ற அமர்வில் நடைபெறவுள்ள செயற்பாடுகள் தொடர்பிலான நிலையியற் கட்டளை தொடர்பில் தீர்மானங்களை எடுப்பதற்காக இன்று மாலை கட்சித் தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது.
அன்றைய தினம் ஏனைய தரப்பினர் அதாவது நாடாளுமன்றில் பெரும்பான்மை உறுப்பினர்கள் இதற்கு எதிரப்பினைத் தெரிவித்தால், நாடாளுமன்ற அமர்விற்கு அப்பால் அவர்களது கோரிக்கைகளும் கருத்தில் கொள்ளப்படவேண்டும்.
எனவே, அன்றைய தினம் நாடாளுமன்றம் கூடியதன் பின்னர், சபாநாயகர் விசேட கட்டளைக்கு அமைய, 116 உறுப்பினர்களின் கையொப்பத்துடன் சமர்ப்பிக்கப்பட்ட கடிதம் தொடர்பில் நடவடிக்கைகளை எடுக்கவும், பெரும்பான்மை உறுப்பினர்களின் நிலைப்பாட்டினைத் தெரியப்படுத்தவும் சந்தர்ப்பம் வழங்கப்படும்’ என்றும் கூறப்பட்டுள்ளது.