Loading...
சிம்பாவேயில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 47 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஹராரேயில் நகரிலிருந்து ருசாபே நகருக்கு செல்லும் வீதியில், குறித்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது.
இவ் விபத்து நேர்ந்ததை நேரில் கண்ட பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
Loading...
அதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், மற்றும் மீட்புக்குழுவினர் உடனடியாக விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பொலிஸ் அதிகாரி பால் நியாதி, இந்த விபத்தில் இதுவரை 47 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதால் உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
Loading...