Loading...
சுவிஸர்லாந்தைச் சேர்ந்த எடெல்வைஸ் விமான சேவைகள் நிறுவனம் மாத இறுதியில் இருந்து கொழும்புக்கு சிறப்பு விமான சேவையை நடத்த உள்ளது.
சுவிஸ் இன்டர்நெஷனல் எயார்லைன்சிற்குச் சொந்தமான இந்த நிறுவனம், சூரிச் விமான நிலையத்தில் உள்ள அதன் தளத்திலிருந்து ஐரோப்பிய மற்றும் சர்வதேச இடங்களுக்கு விமான சேவைகளை வழங்கி வருகின்றது.
Loading...
இந்நிலையில் முதன்முறையாக இலங்கை நோக்கிய தனது சேவையை விரிவு படுத்தியுள்ளது.
மேலும் தற்போது இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் நலன்கருதி, எதிர்வரும் ஜனவரி மாதம் வரை விசேட சேவைகளை நடத்தப் போவதாக எடெல் வைஸ் நிறுவனத்தின் இலங்கையைச் சேர்ந்த ஒரு அதிகாரி தெரிவித்துள்ளார்.
Loading...