Loading...
முல்லைத்தீவு- மணலாறு பகுதியில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினரின் தரைவழிப்பாதை துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முல்லைத்தீவில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையின் காரணமாக குமுழமுனை கிழக்கு பெருங்காட்டு பகுதியில் உள்ள நித்தகை குளம் உடைப்பெடுத்துள்ளது.
இதன் காரணத்தினால் திடீரென பெருங்காட்டு பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன், மணலாறு வடக்கு பிரதான வீதி தடைப்பட்டது.
Loading...
இதனால் மணலாறு வடக்கு பெருங்காட்டு பகுதியில் நிலைகொண்டிருந்த இராணுவத்தினரின் தரைவழி போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் நாயாற்று பகுதியில் நிலைகொண்டுள்ள கடற்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதுடன் விமானப்படையினரின் கண்காணிப்பும் தொடர்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
Loading...