கந்தளாய் பிராந்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரால் 5000 ரூபாய் கள்ள நோட்டுக்களை தம்வசம் வைத்திருந்த இளைஞர் ஒருவரை இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட இளைஞர் தம்பலகாமம், தாயிப் நகர் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
தம்பலகாமம் பகுதியில் இருந்து கந்தளாய் நகர்ப்பகுதி பகுதிக்கு வந்து கொண்டிருந்த போது கந்தளாய் பிராந்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து அவரை மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் வைத்து சோதனையிட்ட போது அவரிடம் இருந்து 5000 ரூபாய் தாள்கள் பத்து கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை கந்தளாய் தலைமையக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாகவும் கந்தளாய் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தலைமை பொலிஸார் தெரிவித்தார்.