பிரபல நடிகை ரம்பா, தமிழ் சினிமாவில் 1990களில் கொடிகட்டி பறந்தார். ‘தொடையழகி’ என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டு வந்தார். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர்.
ஒரு காலகட்டத்தில் இவர் தொழிலதிபர் இந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவுக்கு முழுக்குப் போட்டார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் பிறந்தது. இடையில் அவர்கள் இருவரும் பிரிந்தனர்.
பிரிந்து வாழ்ந்த இவர்கள் பொலிஸ் ஸ்டேஷன், கோர்ட்டுக்கும் அலைந்தனர். பின்னர் அவர்கள் இருவரும் நீதிமன்ற ஆலோசனைப்படி மீண்டும் இணைந்து வாழ முடிவு செய்தனர். இந்நிலையில் நடிகை ரம்பா தனது கணவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார்.
இதையடுத்து, மீண்டும் ரம்பா கர்ப்பமானார். மூன்றாவது முறையாக கர்ப்பமான ரம்பாவிற்கு சீமந்தம் செய்யப்பட்ட புகைப்படங்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் வெளியாகிது.
இந்நிலையில் ரம்பா தன் கணவர் மற்றும் மூன்று குழந்தைகளுடன் சேர்ந்து தீபாவளி கொண்டாடிய காணொளி வெளியாகியுள்ளது.